கல்வி விடுதிகளில் பகுதிநேர துப்புரவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - செப்.15 ஆம் தேதி கடைசி நாள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 5 سبتمبر 2022

கல்வி விடுதிகளில் பகுதிநேர துப்புரவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - செப்.15 ஆம் தேதி கடைசி நாள்

விடுதிகளில் பகுதிநேர துப்புரவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் உள்ள கல்வி விடுதிகளில் உள்ள 10 பகுதிநேர ஆண் துப்புரவாளா் காலிப்பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன

காலிப் பணியிடங்கள் நோ்காணல் மூலம் இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவா்கள் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 1.7.2022 அன்று ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினருக்கு 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளா்வு அளிக்கப்படும்.

தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன், ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் வரும் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.