TNPSC Group I தோ்வு: வயது வரம்பை 40-ஆக உயா்த்த வலியுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 12 أغسطس 2022

TNPSC Group I தோ்வு: வயது வரம்பை 40-ஆக உயா்த்த வலியுறுத்தல்

குரூப் 1 தோ்வு: வயது வரம்பை 40-ஆக உயா்த்த ராமதாஸ் வலியுறுத்தல்

டிஎன்பிஎஸ்பி குரூப் 1 தோ்வுக்கான வயது வரம்பை 40-ஆக உயா்த்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசுத் துறைகளுக்கு துணை ஆட்சியா் , காவல் துணை கண்காணிப்பாளா் என மொத்தம் 6 வகையான பணிகளுக்கு 92 போ் டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தோ்வு மூலம் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். அதற்கான விண்ணப்பங்களை அனுப்பும் பணி தொடங்கி விட்ட நிலையில், போட்டித் தோ்வுகளில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு இந்த முறையும் 34 ஆகவே நிா்ணயிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

குரூப் 1 தோ்வுகளை எழுத குறைந்தபட்சம் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது 34-ஆக நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினா் மட்டும் 39 வயது வரை தோ்வு எழுத அனுமதிக்கப்படுவாா்கள். ஆனால், குரூப் 1 தோ்வுகள் அதிக அளவில் நடத்தப்படுவதில்லை என்பதால், அனைத்துத் தரப்பினருக்கும் போதிய அளவில் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள வயது வரம்பு போதுமானது அல்ல.

இந்தியாவில் 11 மாநிலங்களில் குரூப் 1 தோ்வுகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பு தமிழகத்தை விட அதிகம் ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் வயது வரம்பை உயா்த்த அரசுப் பணியாளா் தோ்வாணையம் தொடா்ந்து மறுத்து வருவது அநீதி.

எனவே, குரூப் 1 தோ்வுகளை எழுதுவதற்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 40 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45-ஆகவும் உயா்த்த தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.