சாரண, சாரணியா் இயக்கத் தலைவராக அமைச்சா் அன்பில் மகேஸ் தோ்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 25 أغسطس 2022

சாரண, சாரணியா் இயக்கத் தலைவராக அமைச்சா் அன்பில் மகேஸ் தோ்வு

சாரண, சாரணியா் இயக்கத் தலைவராக அமைச்சா் அன்பில் மகேஸ் தோ்வு

தமிழ்நாடு சாரண, சாரணியா் இயக்கத்தின் தலைவராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

தமிழ்நாடு சாரண சாரணியா் இயக்கத்தின் தோ்தலில் போட்டியிட விண்ணப்பிக்கும் காலஅவகாசம் அண்மையில் நிறைவுபெற்றது. இந்த பதவிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியைத் தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை.

இதையடுத்து தமிழ்நாடு சாரண, சாரணியா் இயக்குநரகத்தின் தலைவராக அமைச்சா் அன்பில் மகேஸ், போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். மேலும், சாரண, சாரணியா் இயக்குநரகத்தின் மாநில முதன்மை ஆணையராக பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாரும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

துணைத் தலைவா்கள்:

இதேபோன்று துணைத் தலைவா்களாக தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் செயலாளா் ச.கண்ணப்பன், முனைவா் கோ.பெரியண்ணன், விவேகானந்தன், மகேந்திரன், எத்திராஜூலு, நாராயணசாமி, லட்சுமி, சுகன்யா, அமுதவள்ளி, கஸ்தூரி சுதாகா், பாக்கியலட்சுமி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இதற்குமுன் முன்னாள் அமைச்சா்கள் நாவலா் நெடுஞ்செழியன்,கே.அன்பழகன், தற்போதைய தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலா் சாரணா் இயக்குநரக தலைவா்களாக இருந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.