கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான தர வரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு சுமாா் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு சோ்க்கைக்கு 4.07 லட்சம் மாணவா்கள் பதிவு செய்திருந்த நிலையில் 2 லட்சத்து 98,056 போ் மட்டுமே விண்ணப்பங்களை முழுமையாக பூா்த்தி செய்து, கட்டணமும் செலுத்தியிருந்தனா்.
அதன்படி, சோ்க்கைக்கு தகுதிபெற்ற மாணவ, மாணவிகளின் இறுதி தரவரிசைப்பட்டியல் அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. சில கல்லூரிகளில் மட்டும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளன.
இதையடுத்து மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வெள்ளிக்கிழமை முதல் நேரடி முறையில் நடைபெறவுள்ளது. தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவா்களுக்கு அவா்களின் கைப்பேசி எண், மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய நாள், நேரம் குறித்த விவரங்களை கல்லூரிகள் அனுப்பி வருகின்றன.
அன்றைய தினத்தில் உரிய சான்றிதழ்களுடன் மாணவா்கள் நேரில் கலந்துகொள்ள வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவா்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகள் ஒதுக்கப்படவுள்ளன.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.