கோயில் கட்டுவதை விட கல்வி அறிவை பரப்ப வேண்டும்: நடிகர் சூரி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 10 أغسطس 2022

கோயில் கட்டுவதை விட கல்வி அறிவை பரப்ப வேண்டும்: நடிகர் சூரி

கோயில் கட்டுவதை விட கல்வி அறிவை பரப்ப வேண்டும்: நடிகர் சூரி

கோவில் கட்டுவதை விடக் கல்வி அறிவை பரப்ப வேண்டும் என நடிகர் சூரி பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற விருமன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூரி எதேச்சையாகக் கோயில் கட்டுவதை விடக் கல்வி அறிவை பரப்ப வேண்டும் என பேசியதாக சமூக வலைத்தளங்களில் விடியோக்கள் ஆடியோக்கள் மூலமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது

அதற்கு ஹிந்து அமைப்புகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் சூரியின் பிறந்த ஊரான மதுரை மாவட்டம் ராசாக்கூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் திரைப்பட நடிகர் சூரி பொதுமக்களுடன் இணைந்து ஊர் பெரியவர்கள் இளைஞர்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடும் விடியோவை அவரது சொந்த ஊர்க்காரர்கள் அவரது நண்பர்கள் நடிகர் சூரியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவ விட்டு வருகிறார்கள்.

அதில் அவர்களின் கருத்தாக நடிகர் சூரி சுவாமி பக்திக்கும் கோவிலுக்கும் ஆன்மீகத்திற்கும் எதிரானவர் அல்ல. அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் அவருடைய குடும்பம் ஒரு சாமியாடி குடும்பம் என்பதைக் கருத்தாகப் பதிவிட்டுள்ளனர்.

இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.