ஆசிரியர்களை விடுவிக்கக் கோரி மாணவிகள் சாலை மறியல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 1 أغسطس 2022

ஆசிரியர்களை விடுவிக்கக் கோரி மாணவிகள் சாலை மறியல்

ஆசிரியர்களை விடுவிக்கக் கோரி மாணவிகள் சாலை மறியல்



பொள்ளாச்சி பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இரு ஆசிரியர்களை விடுவிக்கக் கோரி பள்ளி முன்பு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர், பள்ளியில் பணியாற்றும் தாவரவியல் ஆசிரியர் பாலச்சந்திரன் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ’child help line 1098'க்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு குழு கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஜூலை 30ம் தேதி ஆசிரியர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை விடுதலை செய்யக் கோரி மாணவிகள் பள்ளியின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு விசாரணையை மீண்டும் துவக்கி உண்மை நிலவரம் அறிந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தன் பேரில் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.