மதுரை நகரில் கூட்ட நெரிசலால் அரசு பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர், தவறி விழுந்ததில் சக்கரம் ஏறி இறந்தார்.
மதுரை, பழைய விளாங்குடியைச் சேர்ந்த தனசேகர் மகன் பிரபாகரன், 14; ஞானஒளிவுபுரம் புனித பிரிட்டோ பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, 8:40 மணிக்கு வீட்டில் இருந்து நண்பர்கள் மூவருடன் பள்ளிக்கு புறப்பட்டார்.பை - பாஸ் ரோடு, செங்கோல் நகர் ஸ்டாப்பில் இருந்து ஆரப்பாளையம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறினார்.
கூட்டம் அதிகமாக இருந்ததால், பஸ்சின் முன்பக்க படிக் கட்டில் நின்று பயணித்தார். ஆரப்பாளையம் டி.டி., ரோட்டில் பஸ் வந்தபோது, எதிர்பாராத விதமாக பிரபாகரன் தவறி விழுந்தபோது பஸ்சின் பின்பக்க டயர் ஏறியது.பலத்த காயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். பஸ் டிரைவர் பாலசுப்பிரமணியன், கண்டக்டர் தெய்வேந்திரனிடம் கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.