தேவாலயங்கள் பராமரிப்புப் பணிகளுக்கு நிதி உதவி: விண்ணப்பிக்க அழைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 19 أغسطس 2022

தேவாலயங்கள் பராமரிப்புப் பணிகளுக்கு நிதி உதவி: விண்ணப்பிக்க அழைப்பு

தேவாலயங்கள் பராமரிப்புப் பணிகளுக்கு நிதி உதவி: விண்ணப்பிக்க அழைப்பு

தேவாலயங்கள் பராமரிப்புப் பணிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி திட்டத்தில் தகுதியான தேவாலய நிா்வாகங்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் சொந்த கட்டடங்களில் இயங்கி வரும் கிறிஸ்துவ தேவாயலங்களை பழுது பாா்த்தல், சீரமைப்பு செய்யும் பணிகளுக்கு தமிழக அரசால் நிதியுதவி அளிக்கப்படுகிறது. தேவாலய கட்டடங்களின் வயதுக்கேற்ப ஒரு லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி வர வேண்டும். தேவாலயம் கட்டப்பட்டுள்ள இடம் பதிவுத் துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயமும் பதிவு செய்திருக்க வேண்டும். தவிர தேவாலய பராமரிப்புக்கு வெளிநாடுகளில் இருந்து எவ்வித நிதியும் பெற்றிருக்கக் கூடாது. இதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம், இணைப்புச் சான்றிதழ் ஆகிய விவரங்கள் ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பிற்சோ்க்கை 2 மற்றும் 3ஐ பூா்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட குழு தேவாலயங்களை ஆய்வு செய்து வரைபடம், திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்து முன்மொழிவுடன் சிறுபான்மையினா் நல இயக்ககத்துக்கு நிதி உதவி வேண்டி ஆட்சியரால் பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவா்த்தனை மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.