12ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 20 أغسطس 2022

12ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வு, ஜூலை / ஆகஸ்ட் 2022 - தேர்வு முடிவு - மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளுதல், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து செய்திக்குறிப்பு வெளியிடக் கோருதல் - தொடர்பாக.

நடைபெற்ற ஜூலை / ஆகஸ்ட் 2022 மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) துணைத்தேர்வு முடிவினை மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளுதல், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து செய்திக்குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்குறிப்பினை மாணவர்கள் / தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தங்கள் நாளிதழில் / தொலைக்காட்சியில் / வானொலியில் செய்தியாக வெளியிடும்படி கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இது செய்திக்குறிப்பு மட்டும். விளம்பரம் அல்ல.



மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) துணைத்தேர்வு ஜூலை / ஆகஸ்ட் 2022 தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்து கொள்ளுதல், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்

செய்திக்குறிப்பு

நடைபெற்ற ஜூலை / ஆகஸ்ட் 2022, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள் தேர்வு முடிவினை, மதிப்பெண் பட்டியலாக (Statement Of Marks) 22.08.2022 (திங்கட்கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் இணையதளத்திலிருந்து தங்களது தேர்வெண் (Roll No.) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

வழிமுறைகள் பின்வருமாறு:

1. தேர்வர்கள் வருகிற 22.08.2022 (திங்கட்கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் தமது மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2. மேற்படி இணையதள முகவரிக்குள் Login செய்தவுடன் Result தோன்றும், அதில் “HSE Second Year Supplementary Exam, Jul / Aug 2022 Result - Statement Of Marks Download" என்ற வாசகத்தினை "Click" செய்தால் தோன்றும் பக்கத்தில் தேர்வர்கள் தங்களது தேர்வெண் (Roll No.) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகிய விவரங்களை பதிவு செய்து, தங்களது மதிப்பெண் பட்டியலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஜூலை / ஆகஸ்ட் 2022, மேல்நிலை துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு 24.08.2022 (புதன்கிழமை) மற்றும் 25.08.2022 (வியாழக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.