6,432 வங்கி அதிகாரிகள் பணி - விண்ணப்பிக்க கடைசி நாள் : ஆகஸ்ட் 22, 2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 3, 2022

6,432 வங்கி அதிகாரிகள் பணி - விண்ணப்பிக்க கடைசி நாள் : ஆகஸ்ட் 22, 2022

6,432 வங்கி அதிகாரிகள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,432 வங்கி அதிகாரிகள்/ மேலாண்மை பயிற்சியாளர் பணியிடங்களுக்கு தகுதியும், ஆர்வமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாமென ஐ.பி.பி.எஸ் அறிவித்துள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி : 

ஐ.பி.பி.எஸ் அதிகாரபூர்வ இணையதளமான Ibps.in தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி : 

ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பது அவசியம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது மதிப்பெண் சதவீதத்தை குறிப்பிட வேண்டும்.

தேர்வு முறை : 
முதனிலை மற்றும் முதன்மை தேர்வு.

தேர்வு நடைபெறும் நாள் : 

முதனிலை தேர்வு உத்தேசமாக அக்டோபரிலும், முதன்மை தேர்வு நவம்பரிலும் நடைபெற உள்ளது.

வங்கி வாரியாக காலி பணியிடங்கள் :

1. கனரா வங்கி - 2,500
2. யூகோ வங்கி - 550
3. பேங்க் ஆப் இந்தியா - 535
4. பஞ்சாப் நேஷனல் வங்கி - 500
5. யூனியன் பேங்க் ஆப் இந்தியா - 2094
6. பஞ்சாப் & சிந்த் வங்கி - 253

விண்ணப்ப கட்டணம் : 

பொது பிரிவினருக்கு ரூ.850, எஸ்.சி/எஸ்.டி மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு ரூ.175 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 
ஆகஸ்ட் 22, 2022

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.