பகுதி நேர பொறியியல் படிப்புகளில் சேர வேண்டுமா? விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 கடைசி தேதி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 1 أغسطس 2022

பகுதி நேர பொறியியல் படிப்புகளில் சேர வேண்டுமா? விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 கடைசி தேதி

ஜூலை 4 முதல் இந்தாண்டுக்கான பகுதி நேர பொறியியல் பட்டிபில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. தற்போது வரை பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு 1,109 போ் பதிவு செய்துள்ளனா். பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் வழியாக ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் பொறியியல் கல்லூரி சார்பில் பகுதி நேர பொறியியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

ஜூலை 4 முதல் இந்தாண்டுக்கான பகுதி நேர பொறியியல் படிப்பில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. தற்போது வரை பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு 1,109 போ் பதிவு செய்துள்ளனா்.

இவர்களில் ஜூலை 30ம் தேதி வரை 609 போ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். விண்ணப்ப பதிவு, சமா்பிப்பு, தரவரிசை பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் வழியாக மட்டுமே நடத்தப்படுகிறது.

விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விவரங்களை https://www.cit.edu.in/mechanical/courses-offered/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 0422-2590080, 94869- 77757 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3-ம்

தேதி இறுதி நாளாகும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.