மறுகூட்டல்-மறுமதிப்பீடு: 1,500 மாணவா்களுக்கு கூடுதல் மதிப்பெண் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 3 أغسطس 2022

மறுகூட்டல்-மறுமதிப்பீடு: 1,500 மாணவா்களுக்கு கூடுதல் மதிப்பெண்

மறுகூட்டல்-மறுமதிப்பீடு: 1,500 மாணவா்களுக்கு கூடுதல் மதிப்பெண்

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதி மறு கூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவா்களில் சுமாா் ஆயிரத்து 500 பேருக்கு கூடுதலாக மதிப்பெண்கள் கிடைத்துள்ளது.

பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு கடந்த மே மாதம் பொதுத்தோ்வுகள் நடைபெற்றன. தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதற்காக விண்ணப்பித்தவா்களில், மதிப்பெண் மாற்றம் உள்ள தோ்வா்களது பதிவெண் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, சுமாா் ஆயிரத்து 500 மாணவா்களுக்கு கூடுதலாக மதிப்பெண்கள் கிடைத்துள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.