தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளிகள் இயங்கும். ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பள்ளிக்கு செல்வார்கள். - தனியார் பள்ளிகள் சங்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 17 يوليو 2022

தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளிகள் இயங்கும். ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பள்ளிக்கு செல்வார்கள். - தனியார் பள்ளிகள் சங்கம்

தனியார் பள்ளிகள்:

தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளிகள் இயங்கும்.

ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பள்ளிக்கு செல்வார்கள்.

- தனியார் பள்ளிகள் சங்கம்.

தமிழகத்தில் நாளை (18.07.2022) தனியார் பள்ளி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு செல்வார்கள்!

கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சமூக விரோதிகளால் சூறையாடப்பட்டு, பள்ளிப் பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. பள்ளியைத் தாக்கி, பள்ளிக்கு சேதம் உண்டாக்கிய சமூக விரோதிகளை காவல்துறை சட்டத்திற்கு முன் நிறுத்தி, உடனடியாக தண்டனை பெற்றுத் தர வேண்டும். இதனை வலியுறுத்தி நாளை (18.07.2022) தனியார் பள்ளி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலைக்கு செல்வார்கள்.

தனியார் பள்ளிகள் எப்போதும் மாணவர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே செயல்படும்.www.kalviseithiofficial.com தமிழகத்தில் பாஜகவின் ஆதரவு பெற்ற சில சங்கங்கள் நாளை (18.07.2022) தனியார் பள்ளிகள் இயங்காது என தன்னிச்சையாக அறிவித்திருக்கின்றன. இதுபோல் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால், தமிழகத்தில் மேலும் பதற்றம்தான் அதிகரிக்கும். இதுபோன்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக ஆதரவு பெற்ற சில பள்ளி சங்கங்கள் தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என்று அறிவித்திருக்கின்றன. ஆனால் எவ்வித இடையூறுமின்றி, மாணவர்களின் நலன் கருதி நாளை தனியார் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும்.

அதே சமயம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை காவல்துறை உடனடியாக கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நீதி பெற்றுத் தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
தமிழகத்தில் நாளை முதல் அனைத்து நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது

கள்ளக்குறிச்சி பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.