பொறியியல், கலை அறிவியல் கல்லூரியில் சேர நாளை கடைசி நாள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 26 يوليو 2022

பொறியியல், கலை அறிவியல் கல்லூரியில் சேர நாளை கடைசி நாள்

பொறியியல், கலை அறிவியல் கல்லூரியில் சேர நாளை கடைசி நாள்

மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர். கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 தேர்வு முடிவு தாமதம் ஆனதால் அம்மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக கல்லூரிகள், பல்கலை கழகங்களில் மாணவர்கள் சேர்க்கையை முடிக்க கூடாது என யு.ஜி.சி. உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து கல்லூரிகளில் சேருவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு கடந்த 22-ந்தேதி வெளியானது. முடிவு வெளியான பின்னர் 5 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி நாளை (27-ந் தேதி) வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். www.kalviseithiofficial.com இதே போல 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1494 பேர் நேற்று வரை விண்ணப்பித்து உள்ளனர்.

சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடந்த 4 நாட்களாக என்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வந்த நிலையில் நாளை மாலையுடன் அவகாசம் முடிகிறது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிகளவில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.