பாலியல் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியரை விடுவிக்கக்கோரி மாணவர்கள் போராட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 28 يوليو 2022

பாலியல் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியரை விடுவிக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே புதுச்சூரங்குடி அரசு பள்ளி கணித ஆசிரியர் தாமோதரன். இவர் மாணவிகளிடம் தவறாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். நேற்று அப்பள்ளி மாணவர்கள், ‘‘கணித ஆசிரியர் எந்த தவறும் செய்யவில்லை, அவரை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும், அதுவரை நாங்கள் வகுப்பறைக்குச் செல்ல மாட்டோம்’’ என்று கூறி பள்ளிக்குள் செல்லாமல் வெளியே நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தகவல் அளித்தார். அவரின் அறிவுறுத்தலின்படி, மாணவர்களின் கோரிக்கையை மனுவாக எழுதி பெற்றுக்கொண்டார். மேலும், கல்வி அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.