சிவகங்கையில் நாளை(ஜூலை 8) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 6 يوليو 2022

சிவகங்கையில் நாளை(ஜூலை 8) தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கையில் நாளை(ஜூலை 8) தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ள முகாமில் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐடிஐ, டிப்ளமோ ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்ற 21 வயது முதல் 45 வயது வரை உள்ள மாவட்டத்தைச் சோ்ந்தோா் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.