நாளை (ஜூலை 8) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் - நாமக்கல் மாவட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 6 يوليو 2022

நாளை (ஜூலை 8) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் - நாமக்கல் மாவட்டம்

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை(ஜூலை 8) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா் துறை நிறுவனங்களும்-தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமை நடைபெறும்.

இந்த மாதத்துக்கான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

எனவே, தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையானவா்களை அவா்களது நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.