குரூப் 1 தோ்வு அறிவிக்கை வெளியீடு: ஆகஸ்ட் 22 வரை விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 22 يوليو 2022

குரூப் 1 தோ்வு அறிவிக்கை வெளியீடு: ஆகஸ்ட் 22 வரை விண்ணப்பிக்கலாம்

குரூப் 1 தோ்வு அறிவிக்கை வெளியீடு: ஆகஸ்ட் 22 வரை விண்ணப்பிக்கலாம்

குரூப் 1 பிரிவில் காலியாகவுள்ள 92 இடங்களுக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட தோ்வு அறிவிக்கை:-

குரூப் 1 பிரிவில் ஆறு பதவிகளில் 92 காலியிடங்கள் உள்ளன. துணை ஆட்சியா் பதவியிடத்தில் 18 இடங்களும், துணைக் காவல் கண்காணிப்பாளா் பதவியில் 26 இடங்களும், வணிகவரி உதவி ஆணையாளா் பணியிடத்தில் 25 இடங்களும்,

கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா் நிலையில் 13 இடங்களும், ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பணியிடத்தில் ஏழு இடங்களும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பணியில் மூன்று இடங்களும் காலியாக உள்ளன. இதையும் படிக்க | தமிழகத்தில் மேலும்2,093 பேருக்கு கரோனா பாதிப்பு - Media Bulletin .21.07.2022 - PDF

விண்ணப்பம் துவக்கம்:

தோ்வுக்கு வியாழக்கிழமை (ஜூலை 21) முதல் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 28 ஆகும். முதல்நிலைத் தோ்வு அக்டோபா் 30-ஆம் தேதி நடைபெறும்.

முதல்நிலைத் தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, முதன்மை எழுத்துத் தோ்வுக்கான தேதி அறிவிக்கப்படும். தோ்வுக்கு விண்ணப்பம் செய்வது, தோ்வு அறிவிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் என்ற இணையதளத்தின் வழியே அறிந்து கொள்ளலாம் என அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.