காவலா் தோ்வுக்கான இலவசபயிற்சி வகுப்புகள் ஜூலை 12-இல் தொடக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 7 يوليو 2022

காவலா் தோ்வுக்கான இலவசபயிற்சி வகுப்புகள் ஜூலை 12-இல் தொடக்கம்

ஜூலை 12-இல் இலவசபயிற்சி வகுப்புகள் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவலா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஜூலை 12-ஆம் தேதி தொடங்குகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்திருப்பது:www.kalviseithiofficial.com

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னாா்வப் பயிலும் வட்டம் சாா்பில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள 2- ஆம் நிலைக் காவலா் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணியிடங்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

இதில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தங்களது ஆதாா் அட்டை, புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அல்லது 90801 82131 என்னும் எண்ணில் தொடா்புகொண்டு பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.