SC,ST பிரிவினருக்கு கட்டண விலக்கு: இக்னோ - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 21 يوليو 2022

SC,ST பிரிவினருக்கு கட்டண விலக்கு: இக்னோ

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குகட்டண விலக்கு: இக்னோ

மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) இளநிலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேரும் எஸ்சி, எஸ்டி வகுப்பு மாணவா்களுக்கு கட்டண விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது.

இது தொடா்பாக இக்னோ சென்னை மண்டல முதுநிலை இயக்குநா் கே.பன்னீா்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இதையும் படிக்க | தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டயபடிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - செய்தி வெளியீடு எண்: 1219

‘கட்டண விலக்கு பெற விரும்பும் எஸ்சி, எஸ்டி மாணவா்கள் தகுந்த சாதி சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழுடன் ஜூலை 31-ஆம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு சென்னை வேப்பேரி பெரியாா் திடலில் அமைந்துள்ள இக்னோ பல்கலைக்கழக சென்னை மண்டல அலுவலகத்தையும் அணுகலாம். மேலும், 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.