தற்காலிக ஆசிரியர் நியமனம் - வரும் 6ம் தேதிக்குள் விண்ணப்பம் வரவேற்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 2 يوليو 2022

தற்காலிக ஆசிரியர் நியமனம் - வரும் 6ம் தேதிக்குள் விண்ணப்பம் வரவேற்பு

தற்காலிக ஆசிரியர் நியமனம் விண்ணப்பம் வரவேற்பு

திருவள்ளூர்:


திருவள்ளூர் மாவட்டத்தில், தற்காலிக ஆசிரியர் பணிக்கு, வரும் 6ம் தேதிக்குள், விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும், ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

காலிப் பணியிட விபரம், முதன்மை, மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலக அறிவிப்புப் பலகையில், வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர், எழுத்து மூலமான விண்ணப்பத்தினை, திருத்தணி கல்வி மாவட்டம் - deotiruttani@gmail.com;

திருவள்ளுர் கல்வி மாவட்டம் - deotlr@nic.in;

ஆவடி கல்வி மாவட்டம் - deoaavadi@gmail.com;

அம்பத்துார் கல்வி மாவட்டம் - deoambt@gmail.com;

பொன்னேரி கல்வி மாவட்டம் - deopon@nic.in

ஆகிய மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது நேரிலோ, வரும் 6ம் தேதிக்குள், விண்ணப்பிக்குமாறு, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.