ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 26 يوليو 2022

ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

தூத்துக்குடியில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டு தோறும் ஜூலை 26 ஆகஸ்டு 5 வரை நடைபெறும். அதன்படி 440-வது ஆண்டு பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5. 30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

தொடர்ந்து காலை 6. 45 மணிக்கு ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை பிஷப் ஸ்டீபன் அந்தோணி ஏற்றி வைத்தார். தொடர்ந்து மதியம் 12 தூய பனிமய மாதா அன்னைக்கு பொன் மகுடம் சூட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த திருவிழாவில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. திருவிழாவையொட்டி 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஆக. 5-ந் தேதி பெருவிழா கூட்டு திருப்பலியும், மாலை 5 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை பனிமய மாதா பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான குமார் ராஜா, உதவி பங்குத்தந்தை பால் ரோமன், களப்பணியாளர் பெல்கிளின்டன், மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் வெளியிட்ட அறிவிப்பில், ஆகஸ்ட் 5ம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 05. 08. 2022 (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும், அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக வரும் 13. 08. 2022 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.