மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வு, ஆகஸ்ட் 2022 - தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு முதன்மை விடைத்தாட்கள் குறித்த அறிவுரைகள் வழங்குதல் - சார்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 19 يوليو 2022

மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வு, ஆகஸ்ட் 2022 - தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு முதன்மை விடைத்தாட்கள் குறித்த அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வு, ஆகஸ்ட் 2022 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு முதன்மை விடைத்தாட்கள் குறித்த அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.

ஆகஸ்ட் 2022, மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்விற்கான முகப்புத் தாட்கள் தலைமையலுவலகத்திலிருந்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு 18.07.2022 அன்று அனுப்பி வைக்கப்பட்டது. உதவி இயக்குநர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு துணைத் தேர்விற்கான முகப்புத் தாட்களை உடன் வழங்கி தைக்கும் பணியினை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், ஆகஸ்ட் 2022, மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்விற்கான தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள முதன்மை விடைத்தாட்களின் வகைகள் மற்றும் முதன்மை விடைத்தாளுடன் வைத்து தைக்க வேண்டிய வரைகட்டத்தாள், வரைபடங்கள் விவரம் ஆகியவை தேர்வு மையங்களுக்கு வழங்கும் பொருட்டு இத்துடன் இணைத்தனுப்பி வைக்கப்படுகிறது.

உதவி இயக்குநர்கள், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலின்படி, சம்பந்தப்பட்ட பாட முதன்மை விடைத்தாளுடன் வரைபடம் / வரைகட்டத்தாளை இணைத்து தைக்க வேண்டிய விவரங்களை துணைத்தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.