2022-2023ம் கல்வியாண்டிற்கான உயர் நிலை மேல் நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் பொது மாறுதல் - கலந்தாய்வை நடத்தி பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திட வேண்டல்-சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 6 يوليو 2022

2022-2023ம் கல்வியாண்டிற்கான உயர் நிலை மேல் நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் பொது மாறுதல் - கலந்தாய்வை நடத்தி பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திட வேண்டல்-சார்பு



2022-2023ம் கல்வியாண்டிற்கான உயர் நிலை மேல் நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் பொது மாறுதல் - கலந்தாய்வை நடத்தி பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திட வேண்டல்-சார்பு

புதிய அரசு பொறுப்பேற்று மிகச் சிறப்பான முறையில், எந்த வித லகரங்களுக்கும் இடம் அளிக்காமல், நேர்மையான முறையில் கல்வித் துறையானது கடந்த ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வை தங்கள் பார்வையில் நடத்தியது என்பதை பெருமையுடன் சுட்டிக் காட்டுகிறோம்.

அதே வேளையில் இந்த கல்வியாண்டின் துவக்கத்தில் உயர்நிலை/ மேல் நிலை பள்ளி தலைமை

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு மட்டுமே நடைபெறும் என்ற அறிவிப்பு அனைவர் மத்தியில் அதிர்ச்சியையும் மன உலைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த காலங்களில் மாறுதல் கலந்தாய்வுகளுக்கான அட்டவணையை கல்வித்துறை வெளியிடும் போது முதல் பொது மாறுதல் கலந்தாய்வை முன்னிறுத்தி பின்பு பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுமாறு கலந்தாய்வு அட்டவணையை உருவாக்கி எவருக்கும் பாதிப்பு இல்லாமல் வெளியிடப்படும், அதே போல் அய்யா அவர்களும் கடந்த (2021 - 2022) கல்வியாண்டிலும் கலந்தாய்வு பின்பற்றப்பட்டது.

ஆனால் இந்த கல்வியாண்டில் மட்டும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு அப்பாற்ப்பட்டு பொது மாறுதல் கலந்தாய்வை புறந்தள்ளி, பதவி உயர்வு கலந்தாய்வை முன்னிறுத்துவது ஏற்புடையது அல்ல, மேலும், EMIS வழியாக கலந்தாய்வு நடைபெறும் போது அரசுக்கு எந்த வித பொருட்ச்செலவே இழப்பீடோ எதுவும் இல்லை என்பதை தங்கள் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

அதனால், ஆசிரியர்களின் பணி அவர்களின் மனநிலை, மற்றும் குடும்ப சூழ்நிலை ஆகியவைகளை கருத்தில் கொண்டு முதலில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தி, பின்பு பதவி உயர்வு கலந்தாய்வை நடத்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.