12ம் வகுப்பு தேர்வில் தோல்வி மாணவன் தற்கொலை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 6 يوليو 2022

12ம் வகுப்பு தேர்வில் தோல்வி மாணவன் தற்கொலை!

திருவேற்காடு வி.ஜி.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவரது மகன் திவாகர் (18) தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அண்மையில் வெளியான 12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவில், தமிழ், கணிதம் ஆகிய 2 பாடங்களில் திவாகர் தேர்ச்சி பெறவில்லையாம். இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த திவாகர் படுக்கை அறை மின்விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்ெகாலை ெசய்துெகாண்டார். வெளியில் சென்றுவிட்டு வந்த பெற்றோர், மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த திருவேற்காடு போலீசார், திவாகர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.