முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் (Ph.D) மாணவர்களுக்கான ஊக்கத் தொகைத் திட்டம் [Press Release No : 1018 ] - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 23 يونيو 2022

முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் (Ph.D) மாணவர்களுக்கான ஊக்கத் தொகைத் திட்டம் [Press Release No : 1018 ]

செய்தி வெளியீடு எண் :1018-

நாள்: 22.06.2022

செய்தி வெளியீடு

முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் (Ph.D) மாணவர்களுக்கான ஊக்கத் தொகைத் திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் செயற்படுத்தப்படும் முழுநேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், 2021-2022 ஆம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயின்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன

திட்ட விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவம் "www.tn.gov.n/forms/deptname/1" என்ற இணைய தள முகவரியில் யாவரும் பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாணாக்கர்கள் விண்ணப்பிக்க 10.06.2022 வரை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது 08.07.2022 வரை கூடுதல் காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாணாக்கர்கள் தங்களது விண்ணப்பங்களை 08.07.2022 நாளன்று மாலை 5.45 மணிக்குள். "ஆணையர், ஆதிதிராவிடர் நல ஆணையரகம், எழிலகம் இணைப்புக் கட்டடம், சேப்பாக்கம். சென்னை-600 005" என்ற முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்க வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.