கல்வி நிலையங்களில் மாணவர்கள் முகக்கவசம் அணிய மாநகராட்சி உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 16 يونيو 2022

கல்வி நிலையங்களில் மாணவர்கள் முகக்கவசம் அணிய மாநகராட்சி உத்தரவு

சென்னை: கல்வி நிலையங்களில் மாணவர்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தும்படி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்னை மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளது.



சென்னையில் கரோனா அதிகரித்து வரும் நிலையில் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.



காய்ச்சல், இருமல் இருந்தால் மாநகராட்சி சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தி உள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி புதன்கிழமை ஒரே நாளில் தமிழகத்தில் 476 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 221 பேருக்கும், செங்கல்பட்டில் 95 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



இதையடுத்து முகக் கவசம், தனி நபா் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகளை பொது மக்கள் கட்டாயம் கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.