மருத்துவ மாணவர் தேர்வு பட்டியல் கொடுத்து கட்சிக்கு பணம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 12 يونيو 2022

மருத்துவ மாணவர் தேர்வு பட்டியல் கொடுத்து கட்சிக்கு பணம்

எம்ஏஎம்.,க்கு மருத்துவ மாணவர் தேர்வு பட்டியல் கொடுத்து கட்சிக்கு பணம் கேட்போம்: ஆற்காடு வீராசாமி ஒப்புதல்: வீடியோ வைரல்

மருத்துவ கவுன்சிலிங் பட்டியலை, கவுன்சிலிங் நடப்பதற்கு முன்னரே, தனியார் மருத்துவ கல்லூரி வைத்துள்ள எம்ஏஎம்., மிடம் பட்டியல் கொடுத்து விட்டு, கட்சிக்கு பணம் கேட்போம் எனவும், அவரும் ரூ.5 கோடி வரை பணம் கொடுப்பார் என தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 2018 வருடம் செப்., 2 அன்று இந்த வீடியோ எடுக்கப்பட்டது. ஒரு முக்கியமான டிவி சேனலின் லோகாவும் அந்த வீடியோவில் இருக்கிறது.

அந்த வீடியோவில் ஆற்காடு வீராசாமி பேசியுள்ளதாவது:

கட்சிக்கு நிதி தேவைப்படும் நேரத்தில், பொருளாளராக இருக்கும் என்னை, நீங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என கருணாநிதி கூறுவார். நான், அதற்கான ஏற்பாடு செய்வேன். எப்படி செய்வேன் என்றால், எம்ஏஎம் வீட்டிற்கு செல்வேன். எம்ஏஎம் என் மீது அன்பு உள்ளவர். அமைச்சராக இருந்த நேரத்தில் பல முறை எனது வீட்டிற்கு வந்துள்ளார். அவர் மருத்துவ கல்லூரி நடத்தி வருகிறார். நான் சுகாதார அமைச்சராக இருந்த போது, நாங்கள் முதலில் பட்டியல் ஒன்றை வெளியிடுவோம். நாங்கள் வெளியிட்ட பட்டியல் நகல் வேண்டும் என்பார். ஏன் என்று கேட்பேன்? நாங்கள் தேர்வு செய்யும் போது, பட்டியலில் இருக்கிறவர்களை எல்லாம் தேர்ந்தெடுத்துவிட்டால், அவர்கள் எப்படியும் அரசு கல்லூரிக்கு செல்வார்கள்.

அந்த இடங்களை நாங்கள் நிரப்பி விடுவோம். அதனால், நாங்கள் வெளியிட்ட பட்டியல் நகல் வேண்டும் என்று கேட்பார். நான் கொடுத்து அனுப்புவேன். அவருக்கு ஒரு கோடி, இரண்டு கோடி எல்லாம் சாதாரணம். அவருடன் தொடர்பு இருந்த காரணத்தினால், நான் வற்புறுத்தி கேட்டால் குறைந்தது 5 கோடி கொடுப்பார்.இவ்வாறு அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.