அரசு விடுதிகளில் மாணவர்களுக்கு உணவு... 'பத்தல... பத்தல...' - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 14, 2022

அரசு விடுதிகளில் மாணவர்களுக்கு உணவு... 'பத்தல... பத்தல...'

மாணவர்களுக்கு உணவு

அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் கட்டணமின்றி பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இவர்களுக்கு பெரும்பாலும் அரிசி சாதமே வழங்கப்பட்டு வந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3 முதல் மாணவர்களுக்கு புதிய பட்டியல்படி உணவு வழங்க அரசு உத்தரவிட்டது.

இதன்படி தினமும் காலை பூரி, சப்பாத்தி, தோசை, கிச்சடி, பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சப்பாத்தி, பூரி போன்றவை தங்களுக்கு போதுமானதாக இல்லை என மாணவர்கள் கருதுகின்றனர்.மேலுார் விடுதியில் 3 சப்பாத்தி வழங்கப்பட, மாணவர்கள் 'டென்ஷன்' ஆனதால் 4 வழங்கப்பட்டது. அதுவும் போதாது எனக்கூறி 5 ஆக உயர்த்தியுள்ளனர். திருநகர் விடுதியில் இரவு 'டிபன்' போதுமானதாக இல்லை என்பதால் அரிசி சாதமே வழங்க வேண்டும். இல்லையெனில் தாங்கள் வெளியில் சென்று ஓட்டலில் சாப்பிட வேண்டியுள்ளது, என மாணவர்கள் கருதுகின்றனர்.அதேபோல விடுதி வார்டன்களும் 'பத்தல பத்தல' என பாடல் பாடாத குறையாக அரசிடம் குமுறலை தெரிவித்துள்ளனர்.
விடுதியில் தங்கியுள்ள பள்ளி மாணவருக்கு மாதம் தலா ரூ.1000, கல்லுாரி மாணவருக்கு ரூ.1100 அரசு வழங்குகிறது. புதிய உணவுப்பட்டியல்படி மாணவர்களுக்கு உணவு வழங்க, இத்தொகையை உயர்த்தித் தரவேண்டும் என்கின்றனர்.தவிர சமையல் செய் வோரும் தங்களுக்கு உதவிட கூடுதலாக சமையலர் ஒருவரை பணிநியமனம் செய்ய வேண்டும் என 'பத்தலை' பாடலை பாடுகின்றனர். இப்படி விடுதியில் உள்ள அனைத்து தரப்பினரும் 'பத்தலை' பாடலை குமுறலாக பாடுகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.