பொறியியல் கல்லூரிகளில் B.E., படிப்புகளில் Lateral Entry மூலம் நேரடி 2-ம் ஆண்டு சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 23, 2022

பொறியியல் கல்லூரிகளில் B.E., படிப்புகளில் Lateral Entry மூலம் நேரடி 2-ம் ஆண்டு சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்



தகுதிவாய்ந்த டிப்ளமோ பட்டயப்படிப்பு மற்றும் பி.எஸ்.சி. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணாக்கர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியற் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவிபெறும் / அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லுரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

செய்தி வெளியீடு எண் :1024

நாள்: 23.06.2022

செய்தி வெளியீடு

தகுதிவாய்ந்த டிப்ளமோ பட்டயப்படிப்பு மற்றும் பி.எஸ்.சி. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணாக்கர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியற் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவிபெறும் / அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லுரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க தேவையான நெறிமுறைகள் :

1) விண்ணப்பிக்கும் முறை : www.tnlea.com / www.accet.co.in / www.accetedu.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

2) இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நாள் : துவங்கும் நாள்: 24.06.2022 முடிவுறும் நாள் : 23.07.2022

3) பதிவுக் கட்டணம் : பதிவுக் கட்டணம் ரூ.300/-ஐ விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.

இணையதளம் வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாத மாணாக்கர்கள், "The Secretary, Second year B.E./B.Tech. Degree Admissions - 2022-23, ACGCET, Karaikudi" payable at Karaikudi" என்ற பெயரில் 24.06.2022 அன்றிலிருந்து பெற்ற வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFC) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம்.

4) SC/SCA/ST பிரிவினர் பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை

5) விண்ணப்பதாரர்கள் வங்கி வரைவோலையை சமர்ப்பிப்பதற்கும், இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை (TFC) பயன்படுத்திக் கொள்ளலாம்.

அனைத்து TFC மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6) இந்த கல்வியாண்டில் Second Year B.E./B.Tech. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும்,

7) மேலும் விவரங்கள் அறிய www.tnlea.com / www.accet.co.in / www.accetedu.in ஆகிய இணையதள முகவரியில் "INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES" பக்கத்தில் பார்க்கவும்.

8) தொடர்பு எண் : 04565-230801, 04565-224528

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

**********

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.