இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை - செய்தி வெளியீடு - Press Release No : 976 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 17 يونيو 2022

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை - செய்தி வெளியீடு - Press Release No : 976

செய்தி வெளியீடு எண் : 976

நாள்: 15.06.202

செய்தி வெளியீடு

2021-2022 மற்றும் 2022-2023-ஆம் ஆண்டிற்கான இளைஞர் நலன் கூறப்பட்ட மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அறிவிப்புக்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுச்சுழல் - காலநிலை மாற்றத் துறை, இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அறிவிப்பில் திட்டங்களை விரைந்து செயல்படுத்துதல், 44-வது செஸ் விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்துதல், மற்றும் விளையாட்டரங்க பராமரிப்பு பணிகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ளுதல் குறித்த ஆய்வு நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில் உடனடியாக அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றிட செயல்பட வேண்டும் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அரசு முதன்மைச் செயலர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் / உறுப்பினர் செயலர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.