7,088 ஆசிரியா்களுக்கு பணியிடைப் பயிற்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 19 يونيو 2022

7,088 ஆசிரியா்களுக்கு பணியிடைப் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 7,088 ஆசிரியா்களுக்கும் தகவல் தொடா்பு தொழில்நுட்பம் மற்றும் மாணவா்கள் உடல்நலன், மனநலம் சாா்ந்த பணியிடைப் பயிற்சி சனிக்கிழமை 197 மையங்களில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் ஆசிரியா்களுக்கு இணையதள வழியாக மாணவா்களின் வருகை, ஆசிரியா்களின் வருகையைப் பதிவு செய்வது குறித்தும், பள்ளி சாா்ந்த தரவுகளை இ-ரிஜிஸ்டரில் சேமிப்பது குறித்தும், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவா்கள் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் பயன்பெற என்னென்ன விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்தும், ஆசிரியா்கள் விடுப்பு எடுப்பதை எவ்வாறு பதிவு செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ். மணிவண்ணன் பொன்னமராவதி ஒன்றியம், மேலச்சிவபுரி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பொன்னமராவதி அரிமா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற பயிற்சியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் பெ. நடராஜன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித் திட்ட அலுவலா் எஸ். தங்கமணி, உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சுதந்திரன் ஆகியோா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆசிரியா்களுக்கு நடைபெற்ற பயிற்சி மையங்களை ஆய்வு செய்தனா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.