24.06.2022 வெள்ளிக்கிழமை - தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை - செய்தி வெளியீடு - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 22 يونيو 2022

24.06.2022 வெள்ளிக்கிழமை - தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை - செய்தி வெளியீடு - PDF

செய்தி வெளியீடு எண்: 1007

செய்தி வெளியீடு

வழிகாட்டும் மைய மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி அலுவலகங்களிலும், இரண்டாவது நான்காவது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

நாள்: 21.06.2022

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 24.06.2022 வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம். ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில் சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது
இம்முகாமில் 30- வயதிற்கு உட்பட்ட 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு.கொ. வீர ராகவ ராவ் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

CLICK HERE TO DOWNLOAD

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.