திட்டமிட்டபடி ஜூலை 17ல் நீட் தேர்வு - தேசிய தேர்வு முகமை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 28 يونيو 2022

திட்டமிட்டபடி ஜூலை 17ல் நீட் தேர்வு - தேசிய தேர்வு முகமை

புதுடில்லி: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி வரும் ஜூலை 17ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்வு, மத்திய பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சியுஇடி தேர்வு, மத்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கான ஜே.இ.இ முதல்நிலைத் தேர்வு ஆகிய தேர்வுகள் நீட் தேர்வு நடைபெறும் சமயத்திலேயே அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன.

இதனால் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி வரும் ஜூலை 17ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை விளக்கம் தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.