அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை: பிரதமர் மோடி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 14 يونيو 2022

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை: பிரதமர் மோடி

புது தில்லி: நாட்டில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் புதிதாக 10 லட்சம் பேருக்கு மத்திய அரசுப் பணியில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.



மத்திய அரசுப் பணிகளில் 10 லட்சம் பேரை நியமனம் செய்ய வேண்டும் என்று பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



மத்திய அரசுத் துறைகள், அமைச்சகங்கள் ஆகியவற்றை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசுத் துறைகளிலும், அமைச்சகங்களிலும் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.



அதன்படி, நாட்டில், மத்திய அரசுப் பணிகளுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் காலியாக இருக்கும் 10 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.