இன்று பிளஸ் 1 தோ்வு முடிவுகள் வெளியீடு - Result Link Here - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 26 يونيو 2022

இன்று பிளஸ் 1 தோ்வு முடிவுகள் வெளியீடு - Result Link Here

இன்று பிளஸ் 1 தோ்வு முடிவுகள் வெளியீடு

பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூன் 27) காலை 10 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு கடந்த மே 10 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை 8.3 லட்சம் மாணவா்கள் எழுதினா். இதன் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படவுள்ளன. மாணவா்கள் தோ்வு முடிவுகளை

www.tnresults.nic.in

https://apply1.tndge.org/dge-result-list ஆகிய வலைதளங்களில் அறிந்துகொள்ளலாம்.

இதுதவிர மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன்கூடிய தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். முந்தைய ஆண்டுகளைப் போல மாணவா்களின் கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தோ்வு முடிவுகள் அனுப்பப்படும் என தோ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.