திண்டுக்கல் மாவட்டம், அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைகுழுவின் முக்கிய அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 17 مايو 2022

திண்டுக்கல் மாவட்டம், அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைகுழுவின் முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம், அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைகுழுவின் முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம்.

தொடக்கக் கல்வித்துறை அனுமதியோ, ஆணையோ இல்லாமல், தன்னிச்சையாக திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களை சில வாட்ச்-அப் குழுக்களில் இணைந்து தேவையற்ற பணிச்சுமையும், மன உளைச்சலும் ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி முடிந்து இரவு 08.00 மணிக்குப் பின்னரும் விடுமுறை நாட்களிலும், இக்குழுக்கள் சார்ந்து ஆன்-லைன் மீட்டிங் நடத்துவதாகவும், அதில் ஆசிரியர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும் தெரியவருகிறது. பண்டிகை நாட்களிலும் தமிழ்புத்தாண்டு, தெலுங்கு வருடபிறப்பு, புனித வெள்ளி, ஈஸ்டர் விடுமுறை நாட்களிலும் ஆன்-லைன் மீட்டிங் நடத்தி அவசியம் பங்கேற்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது. அலுவலக ரீதியாக இல்லாமல் தொடக்கக்கல்வித்துறையில் நிர்வாகத்திற்குப் புறம்பாக துவங்கப்பட்டுள்ள Whats app 6 LSRW/ CRC WISE WASHAP GROUP, / HIGH/HIGER SECONDARY CRC, / Dindigul Easy Einglish Group/ RP Group முதலானவை ஆசிரியர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன. Whatsapp குழுமத்தியில் Admin ஆக செயல்படும் ஆசிரியர்களுக்குத் தரப்படும் அழுத்தத்தின் காரணமாக தேவையில்லாத கூடுதல் அதிகாரம் செய்வதாகவும், தொல்லைகள் தருவதாகவும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் செய்திகளின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தொடக்கக்கல்வித்துறை சார்ந்த ஆசிரியர் இயக்கங்களும் இணைந்து எடுத்துள்ள முடிவின்படி அடிப்படையில் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தி வரும் மேற்கண்ட வாட்ஸ்-அப் குழுக்களில் இருந்து அனைத்து ஆசிரியப் பெருமக்களும் (குழு உறுப்பினராகவோ, குழு அட்மினாகவோ உள்ள அனைவரும் ஒட்டுமொத்தமாக நாளை 18.05.2022 புதன்கிழமை காலை 10.00 மணிக்குள் கூண்டோடு விலகுவது என அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் சார்பாக முடிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஆசிரியப் பெருமக்களும் மேற்கண்ட முடிவினை ஏற்று நமக்குத் தொல்லை தரும் குழுக்களில் இருந்து வெளியேற வேண்டுமாய் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.