அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 21 مايو 2022

அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஆலோசனை

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

வல்லம், மே 21: அரசு பள்ளிகளில் கண்காணிப்பு பொருத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரிர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி:

அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்து வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் நன்கொடை வசூலிக்க கூடாது. கடந்த ஆண் டில் 6 லட்சம் பேர் அரசு பள்ளிகளை தேடி வந்துள்ளனர். பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு முதல்வர் அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல திட்டங்களை அறிவித்துள்ளார். 30 ஆண்டு காலம் சிறையில் இருந்த பேரறிவாளன் விடு தலை கூட திமுக ஆட்சியில் தான் நடந்துள்ளது. முதல் வர் மு.க. ஸ்டாலின் நல்ல கைராசிக்காரர் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. தற்போது தேவையான மழை பெய்து நல்ல சூழல் உள்ளது. இதனால் முன்கூட்டியே டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.