அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பிரியாணி விருந்து; ஆசிரியர்கள் அசத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 14 مايو 2022

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பிரியாணி விருந்து; ஆசிரியர்கள் அசத்தல்

கொரோனா தொற்றால் கடந்த இரண்டு வருடங்களில் ஆண்டுத்தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வுகளை எதிர் கொண்டு எழுதினர். 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி கடைசி நாளான நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் ஒன்றியத்தை சேர்ந்த கும்மட்டித் திடல் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழை இலையில் ஸ்வீட், பாயாசத்துடன் பிரியாணி விருந்தளித்து தங்கள் பிரியங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணன் கூறியதாவது:

கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்றால் பள்ளியின் இறுதிநாளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அமுது படைக்கும் நிகழ்வு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் போனது. எங்கள் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பிரியாணி விருந்து வைத்து, அந்த துயரத்தை ஏக்கத்தை தீர்த்துக் கொண்டோம் என்று கூறினார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.