தொழிலாளர் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை உயர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 16, 2022

தொழிலாளர் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை உயர்வு

Chennai District Collector has announced that the scholarships for working children have been changed. Chennai District Collector Vijaya Rani said in a statement yesterday that the scholarships for children of beedi, limestone and dolomite miners and cinema workers operating under the Union Ministry of Labor and Employment have been adjusted from the 2022-23 academic year.

Accordingly, a new scholarship has been announced for both men and women. Rs.1000 / - for book and textile for class I to IV, Rs.1500 / - for class 5 to 8, Rs.2000 / - for class 9 to 10, Rs.3000 / - for class 11 to 12, Rs.6000 / - for ITI and Polytechnic courses. , Rs.6000 / - for undergraduate (including agricultural degree) and Rs.25000 / - for vocational courses (engineering, medicine, business management). Thus he has said.
தொழிலாளர் குழந்தை கல்வி உதவி தொகை

தொழிலாளர் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் விஜயா ராணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின், மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பீடி, சுண்ணாம்பு கல் மற்றும் டோலமைட் சுரங்க தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்கள் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை 2022-23 கல்வி ஆண்டில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.25000 வழங்கப்படும்

அதன்படி, ஆண், பெண் என இருபாலருக்கும் ஒரே அளவிலான புதிய கல்வி உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் 4ம் வகுப்பு வரை புத்தகம் மற்றும் துணி வாங்குவதற்கு ரூ.1000, 5 முதல் 8ம் வகுப்பு வரை ரூ.1500, 9, 10ம் வகுப்பிற்கு ரூ.2000, 11 முதல் 12 வரை ரூ.3000, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.6000, பட்டப்படிப்பு (விவசாய பட்டப் படிப்பு உட்பட) ரூ.6000, தொழில் படிப்புகளுக்கு (பொறியியல், மருத்துவம், வணிக மேலாண்மை) ரூ.25000 வழங்கப்படும்.தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள் மட்டுமே கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.