மாணவர்களுக்கு 'சிக்கன்' பிரியாணி - அரசு பள்ளி ஆசிரியர்கள் அசத்தல் விருந்து! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 11 مايو 2022

மாணவர்களுக்கு 'சிக்கன்' பிரியாணி - அரசு பள்ளி ஆசிரியர்கள் அசத்தல் விருந்து!

மாணவர்களுக்கு 'சிக்கன்' பிரியாணி

விருத்தாசலம் அருகே அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு, ஆசிரியர்களே, 'சிக்கன்' பிரியாணி சமைத்து, பரிமாறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் அசத்தல் விருந்து!

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கடந்த 5ம் தேதி முழு ஆண்டு தேர்வு துவங்கி, நாளையுடன் முடிவடைகிறது.

வரும் 14 முதல், ஜூன் 12 வரை, 1 - 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 208 மாணவர்கள் படிக்கின்றனர்.

இவர்களுக்கு, அப்பள்ளி ஆசிரியர்களே சிக்கன் பிரியாணி சமைத்து பரிமாற முடிவு செய்தனர்.அதன்படி, நேற்று ஆசிரியர்கள் சிக்கன் பிரியாணியை சமைத்து, மாணவர்களுக்கு பரிமாறி மகிழ்ந்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.