தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் கைது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 2 مايو 2022

தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் கைது

தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது பாளையங்கோட்டை அருகே சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக இசை ஆசிரியா் உள்பட இருவரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அடுத்த வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, தாய் தந்தை இல்லாததால் மேலப்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். பாட்டியின் அரவணைப்பில் அங்குள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில், கேடிசி பகுதியைச் சோ்ந்த பொன்கணேஷ்(20) என்ற வாலிபருடன் சிறுமிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. சிறுமியை கட்டாயப்படுத்தி பொன். கணேஷ் பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் தன்னுடன் நெருங்கி பழகும் விஷயத்தை யாரிடமும் சொல்ல கூடாது என சிறுமியை மிரட்டியதாகவும் தெரிகிறது.

இதுபோன்ற சூழலில் சிறுமியின் பள்ளியில் இசை ஆசிரியரான இருதயராஜ் மகன் அருள்ராஜ் ஜோசப் (24) என்பவா், சிறுமியை தொடர்பு கொண்டு அவருக்கு பைக் ஓட்ட கற்று தருவதாக கூறியுள்ளார். ஆசிரியர் என்பதால் அவரை நம்பி சிறுமி அருள்ராஜ் ஜோசப் உடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றபோது ரெட்டையார்பட்டி இரட்டை மலை அருகே வைத்து ஆசிரியர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஆசிரியர் அருள்ராஜ் ஜோசப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை பொன்கணேஷிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து பொன் கணேஷ் ஆசிரியரை தொடர்பு கொண்டு சிறுமி விவகாரத்தை வெளியில் சொல்லாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் பொன்கணேஷ் சிறுமியின் இல்லத்துக்கு அடிக்கடி வருவதை கவனித்த சிறுமியின் பாட்டி பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் சிறுமியிடம் விசாரித்தபோது பொன்கணேஷ் மற்றும் ஆசிரியர் அருள்ராஜ் ஜோசப் இருவரும் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து அருள்ராஜ் ஜோசப், பொன் கணேஷ் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பள்ளிகளில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் சம்பவம் அண்மையில் அதிகரித்து வரும் சூழலில் நெல்லையில் ஆசிரியர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.