சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு 78 ஆக உயர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 25 أبريل 2022

சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு 78 ஆக உயர்வு

சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு 78ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் கரோனா பரிசோதனைகளும் தடுப்பூசி இயக்கங்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ஐஐடி நிறுவனத்தில் ஏற்கெனவே 60 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் 18 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவர்களுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 700க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை ஐஐடி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.