அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் செவிலியர் கல்லுாரி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 9 أبريل 2022

அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் செவிலியர் கல்லுாரி

''மாவட்டங்களில் செவிலியர் பயிற்சி கல்லுாரி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - செந்தில்குமார்:

கள்ளக்குறிச்சியில் செவிலியர் கல்லுாரி அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் சுப்பிரமணியன்:

சேலம் மருத்துவ கல்லுாரியிலும், கடலுாரிலும் செவிலியர் கல்லுாரி உள்ளதால், கள்ளக்குறிச்சியில் புதிய செவிலியர் கல்லுாரி துவங்கும் திட்டம் இல்லை.தமிழகத்தில் தற்போது, 36 செவிலியர் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 2,661 இருக்கைகள் உள்ளன. செவிலியர் பயிற்சி கல்லுாரிகள், 21 மாவட்டங்களில் மட்டுமே உள்ளன. பிற மாவட்டங்களில், செவிலியர் பயிற்சி கல்லுாரிகள் துவக்க, நிதி நிலைமைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க., - பிரபாகரன்:

பெரம்பலுார் மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லுாரி துவக்கும் திட்டம், பத்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு துவக்கப்படுமா? அமைச்சர் சுப்பிரமணியன்:

பெரம்பலுார், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்துார், காஞ்சிபுரம் மாவட்டங்களில், புதிய மருத்துவ கல்லுாரிகள் அமைக்க, மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்.

அ.தி.மு.க., - சித்ரா:

ஏற்காடு அரசு மருத்துவமனையும், அங்குள்ள பிரேத பரிசோதனை மையமும் மிகவும் பழுதடைந்துள்ளன. புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும்.

அமைச்சர் சுப்பிரமணியன்:

தமிழகம் முழுதும் எங்கெல்லாம் அடிப்படை கட்டமைப்பு வசதி தேவையோ, அதை மேற்கொள்ள, ௮00 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.