புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்: சுகாதார அமைப்பு எச்சரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 3 أبريل 2022

புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்: சுகாதார அமைப்பு எச்சரிக்கை

'ஒமைக்ரான்' வைரசின் துணை பிரிவுகளான, 'பி.ஏ., 1 மற்றும் பி.ஏ., 2' வைரஸ்கள் இணைந்து, எக்ஸ்.இ., என்ற புதிய வகை கொரோனா வைரசை உருவாக்கி உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுதும், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்பு களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும், மரபணு மாறிய புதிய வகை வைரஸ்கள், அச்சுறுத்தலாகவே உள்ளன.இந்நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ், பரவத் துவங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒருவர், இரண்டு வகை வைரஸ்களால் பாதிக்கப்பட்டால், அவை, புதிய வகை வைரஸ் உருவாக வழிவகுக்கின்றன.இதன்படி, ஒமைக்ரான் வைரசின் பிரிவுகளான பி.ஏ., 1 மற்றும் பி.ஏ., 2 வகை வைரஸ்கள் சேர்ந்து, எக்ஸ்.இ., என்ற மரபணு மாறிய புதிய வகை வைரசை உருவாகி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை வைரசால், பிரிட்டனில் ஜனவரி 19ம் தேதி, முதல் பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை, 600க்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.