வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 24 أبريل 2022

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை:

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொகை பெறுவதற்கு பொதுப்பிரிவு இளைஞர்களுக்கு தங்கள் கல்வி தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகளுக்குள்ளும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டும் போதுமானது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை

இந்த திட்டம் மூலம் உதவித்தொகை பெற விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது http://tnvelaivaaipu.gov.in மற்றும் employmentexchange.tn.gov.in என்ற இணையதளத்தில் உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.

இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் ஆகியோரின் கையொப்பம் (அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நீங்கலாக) முத்திரையினை பெற்று படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து வரும் மே 31ம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தேசிய மையமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சமர்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.