முதலமைச்சர் மாநில இளைஞர் விருது
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் விண்ணப்பங்களை வரும், மே 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியுள்ளதாவது:
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை, அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது.
விருதுக்கு தகுதியான, 15 முதல் 35 வயதுடைய மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வர் கைகளால், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும். மே 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்கள், மே 10ம் தேதிக்குள், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சமுதாய நலனுக்காக தொண்டாற்றி, அந்த தொண்டு சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
உள்ளூர் சமுதாய மக்களிடம் அவர்களுக்கு உள்ள மதிப்பு, விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
CHIEF MINISTER’S STATE YOUTH AWARD - ONLINE APPLICATION 2022 - 2023

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.