கல்வித்துறையில் அரசியல்? - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 23 أبريل 2022

கல்வித்துறையில் அரசியல்? - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

கல்வித்துறையில் அரசியல்

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் மண்டல அளவிலான பள்ளிக்கல்வித்துறை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் கோவை நீலகிரி கரூர் ஈரோடு பள்ளி கல்வி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் அன்பு மொழி பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பள்ளி கல்வித்துறை சார்பில் 11 மாத்தத்தில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒழுக்கம் என்பது பள்ளியில் இருந்து துவங்க வேண்டும், மாணவர்களின் கெட்ட பழக்கங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இடைநீக்கம் என்பது, மற்ற மாணவர்களையும் திருத்த வேண்டும் என்ற கட்டாயமே அது. அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி! இடைநீக்கம் செய்தாலும் தேர்விற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. மாநில கல்வி கொள்கை முனைப்பை காட்டுகின்றோம். முதல்வர் நடத்துக்கொள்ளும் கூட்டத்தின் அறிவுரையின் பேரில் கொரோனா தடுப்புகளுடன் பள்ளிகள் செயல்படும். ஆங்கிலம் படிக்க கூடாது என கூற வில்லை. அது அவர்களின் விருப்ப பாடம்.

நடமாடும் உலவியல் வாகனங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். கல்வித்துறையில் அரசியல் கிடையாது. எந்த ஆட்சியில் எந்த திட்டம் கொண்டு வந்தாலும், மாணவர்களுக்கு பயன் உள்ள திட்டங்கள் எதுவதாக இருந்தாலும் கொண்டு வரப்படும். பொதுத்தேர்வு எழுதுபவர்கள் மகிழ்ச்சியாக படியுங்கள், உங்களுக்கென தனித்திறமைகள் உள்ளது. அதற்கான நாற்காளிகள் உள்ளது என முதல்வர் கூறியுள்ளார் என்றார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.