ரம்ஜான் | மே 2-க்கும் விடுமுறை? - முதல்வருக்கு வேண்டுகோள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 28 أبريل 2022

ரம்ஜான் | மே 2-க்கும் விடுமுறை? - முதல்வருக்கு வேண்டுகோள்

ரம்ஜான் | மே 2-க்கும் விடுமுறை அளிக்க வேண்டும்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள்

சென்னை: ஈகை பெருநாளை (ரம்ஜான்) சிறப்பாக கொண்டாட மே 2 அன்றும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை என்னும் ஈகைத் திருநாள் வரும் மே 3-ஆம் தேதி கொண்டாடப்படவிருகிறது. வரும் ஏப்ரல் 30, மே1 மற்றும் மே 3 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளன. இடையில் மே 2 திங்கள்கிழமை மட்டும் வேலை நாளாக உள்ளது.

அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவித்து விட்டு, அதற்கு ஈடாக வேறு ஒரு நாளை வேலை நாளாக அறிவித்தால் ஈகைத் திருநாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வசதியாக அமையும். எனவே முதல்வர் இதுகுறித்து உரிய ஆணை பிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்'' என ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.