அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்க்கை பெற்ற 555 மாணவர்களுக்கு கையடக்க கணினிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 26 أبريل 2022

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்க்கை பெற்ற 555 மாணவர்களுக்கு கையடக்க கணினிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மருத்துவ படிப்பில் சேர்க்கை

சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று 2021-22ம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெற்ற 555 மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கிடும் அடையாளமாக 75 மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கினார். மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குகோரி முதல்வர் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருவதோடு, இதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். 7.5 சதவிகித ஒதுக்கீடு

மேலும், முதல்வரின் 7.5 சதவிகித ஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு கிடைத்துள்ளது. இதுமட்டுமின்றி, இந்த ஒதுக்கீட்டை பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்ற பல்வேறு படிப்புகளின் சேர்க்கையிலும் இந்த ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட ஆணையிட்டுள்ளார். 2021-22ம் கல்வி ஆண்டில் மாநில ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 5,932 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுக்கும், பல் மருத்துவத்தில் 1,460 இடங்களுக்கும் மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளார்கள். இவர்களுள் 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் 445 நபர்கள் மருத்துவப் படிப்பிலும், 110 மாணவர்கள் பல் மருத்துவப் படிப்பிலும் சேர்ந்துள்ளனர். இம்மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சியின்போது கையடக்கக் கணினிகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு கையடக்க கணினிகள்

மேலும், இந்நிகழ்ச்சியில், மருத்துவ மாணவி செல்வி ஹேமவர்ஷினி முதல்வரை வாழ்த்தி கவிதை வாசித்தார். அதனைத் தொடர்ந்து, கையடக்க கணினிகள் பெற்றுக் கொண்ட மருத்துவ மாணவர்களின் சார்பாக யுவராஜ், தனிஷ்கா ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன், கே. கணபதி, ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, துணை மேயர் மகேஷ்குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, கூடுதல் மருத்துவக் கல்வி இயக்குநர், செயலாளர், தேர்வுக் குழு வசந்தமணி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக பதிவாளர் அஸ்வத் நாராயணன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.